கிணத்துக்கடவு அருகே கார் மோதி தொழிலாளி பலி
கிணத்துக்கடவு அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கிணத்துக்கடவு
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் முகமது அனீபா (வயது 62). கூலி தொழிலாளி. இவரது மனைவி மெகர் நிஷா (60). கடந்த 6 மாதத்திற்கு முன்பு முகமது அனீபா காங்கேயத்தில் இருந்து கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது அனீபா மளிகை கடைக்கு செல்வதற்காக கோவை -பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் உள்ள கோவில் பாளையத்திற்கு ரோட்டோரம் நடந்து சென்றார். அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கார் அதிவேகமாக வந்து முகமது அனீபா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முகமது ஹனீபாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.