அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
திருவாரூரில், அரசு பஸ் மோதியதில் தொழிலாளி பலியானார்.
திருவாரூரில், அரசு பஸ் மோதியதில் தொழிலாளி பலியானார்.
கட்டுமான பணி
கரூர் மாவட்டம் பாப்பாபட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 38). இவர், திருவாரூரில் தங்கி இருந்து கோவில் கட்டுமான பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து பஸ்நிலையம் எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சக்திவேல் மீது மோதியது.
தொழிலாளி பலி
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.