அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 47) கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சிறுவங்கூர் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் க.அலம்பலம் கிராமத்திற்கு புறப்பட்டார். ரோடுமாமனந்தல் 4 முனை சந்திப்பில் சென்ற போது சங்கராபுரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவசங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story