மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
x

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி இறந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அய்யப்பன்நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். பொட்டலூரணி விலக்கு அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலமுருகன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story