மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 50). தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியன் பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story