மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா தென்னம்பாடி தப்புகாட்டான்பட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 57), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை மளிகை பொருட்களை வாங்குவதற்காக ராம கவுண்டம்பட்டி அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அழகர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story