மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னையன் (வயது65), கூலி தொழிலாளி. மாற்றுத்திறனாளியான இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பொன்னையன் சம்பவத்தன்று வெண்டலிகோடு சந்திப்பில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக செறுதிக்கோணத்தை சேர்ந்த ஜெனீஷ் (35) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பொன்னையன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தநிலையில் பொன்னையன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த ஜெனீஷ் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story