சாலையோரம் தூங்கிய போது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
சாலையோரம் தூங்கிய போது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55), தொழிலாளி. இவர் அதே பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த கோவில் திருவிழாவை காண சென்றார். பின்னர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு செல்லாமல் சாலையோரம் படுத்து தூங்கினார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராஜா சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story