சரக்குவேன் மோதி தொழிலாளி பலி


சரக்குவேன் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சரக்குவேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

தேனி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 53) கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், மதுரைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதற்காக கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஜோசப்ராஜ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்தி்ற்கு விரைந்தனர். பின்னர் ஜோசப்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் நாகப்பட்டினத்தை சேர்ந்த சரக்குவேன் டிரைவரான கலிய பெருமாள் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story