வேன் மோதி தொழிலாளி பலி


வேன் மோதி தொழிலாளி பலி
x

வந்தவாசியில் வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த தென்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 56), கூலி வேலை செய்து வந்தார். இவர், வந்தவாசி-ஆரணி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றார்.

அப்போது அந்த பகுதியில் 'ரிவர்ஸ்' எடுப்பதற்காக பின்புறமாக வந்த வேன் திடீரென ஏழுமலை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story