வாகனம் மோதி தொழிலாளி பலி


வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 Jan 2023 1:00 AM IST (Updated: 13 Jan 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:-

திருப்பத்தூர் ஷெரீப் நகரை சேர்ந்தவர் முனவர் பாஷா (வயது 50). கூலி தொழிலாளி. குருபரப்பள்ளிக்கு வந்திருந்த அவர் கடந்த 10-ந் தேதி கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி அருகில் நடந்து சென்றார். அந்த வழியாக சென்ற வாகனம் மோதி முனவர் பாஷா இறந்தார். தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story