கிணத்துக்கடவில் வாகனம் மோதி தொழிலாளி பலி


கிணத்துக்கடவில் வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் வாகனம் மோதி தொழிலாளி பலி

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு, அம்பேத்கர் வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் கார்த்திக் (வயது 20). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி -கோவை நான்கு வழிச்சாலையில் சென்றபோது முன்னால் எந்த சிக்னல் இல்லாமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் பின் பகுதியில் கார்த்திக் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் கீழே விழுந்த கார்த்திக் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story