குடும்ப தகராறில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


குடும்ப தகராறில்  விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x

குடும்ப தகராறில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பெரவாகோட்டையைச் சேர்ந்தவர் அரவிந்த் பிரான்சிஸ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கவி (24). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது அரவிந்த் பிரான்சிஸ் குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம், சேரன் நகரில் வசித்து வந்தார். இந்தநிலையில் அரவிந்த் பிரான்சிசுக்கும் அவரது மனைவி சங்கவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அரவிந்த் பிரான்சிஸ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் (எலிமருந்து) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அரவிந்த் பிரான்சிசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அரவிந்த் பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story