அரசு பஸ் மோதி தொழிலாளி படுகாயம்


அரசு பஸ் மோதி தொழிலாளி படுகாயம்
x

அரசு பஸ் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ஆர்.டி. மலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள மெயின் சாலையில் வந்தபோது, திருச்சி பில்லாபாளையத்தை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக, கோவிந்தராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவிந்தராஜ் மனைவி ஜெயா கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story