வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு
ஏரி வாய்க்கால் அருகில் வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த கண்டம்பாக்கம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 60) தொழிலாளி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இவருடைய இடதுகாலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து சற்று தாங்கி, தாங்கி நடந்து வந்தார். சம்பவத்தன்று விஸ்வநாதன் கண்டம்பாக்கம் தெற்கு தெருவில் உள்ள ஏரி வாய்க்கால் அருகில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story