தொழிலாளிக்கு கத்திக்குத்து; தந்தை மகனுக்கு வலைவீச்சு


தொழிலாளிக்கு கத்திக்குத்து; தந்தை மகனுக்கு வலைவீச்சு
x

களக்காடு அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தந்தை மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வானுமாமலை மகன் முருகன் (வயது 41). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் அய்யாக்குட்டி (55) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனைதொடர்ந்து முருகனுக்கும், அய்யாக்குட்டிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அய்யாக்குட்டி, அவரது மகன் பாலசுப்பிரமணி (30) ஆகியோர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் இருவரும் சேர்ந்து முருகனை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த முருகன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யாக்குட்டி, அவரது மகன் பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story