திருவெண்ணெய்நல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை


திருவெண்ணெய்நல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:47 PM GMT)

தொழிலாளி தற்கொலை் செய்து கொண்டாா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் மணிகண்டன் (வயது 40). தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு, குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மணிகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை கொலை செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் கோர்ட்டில் விசாரணையும் நடந்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.


Next Story