தொழிலாளியாக இருந்து கொள்ளை கும்பல் தலைவனாக மாறியவர் கைது


தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவை டி.கே.மார்க்கெட்டில் தொழிலாளியாக இருந்து கொள்ளை கும்பல் தலைவனாக மாறியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

டவுன்ஹால்

கோவை டி.கே.மார்க்கெட்டில் தொழிலாளியாக இருந்து கொள்ளை கும்பல் தலைவனாக மாறியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையில் புகுந்தனர்

தூத்துக்குடியை சேர்ந்தவர் மணி (வயது 35). இவர் கோவை டி.கே. மார்க்கெட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகி றார். சம்பவத்தன்று இரவு இவர், கடையில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் 3 பேர் கடைக்குள் புகுந்தனர்.

அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து எழுந்த மணி கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமிகளை பிடிக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மணியை இரும்புக்கம்பி யால் தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

3 பேர் கைது

இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தர வின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப் போது ஒரு கடையில் மர்ம ஆசாமிகள் 3 பேர் புகுந்தனர். அவர்க ளை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் கேரளாவை சேர்ந்த ரபீக் (55), ஈரோட்டை சேர்ந்த முத்துகுமார் (25), கோகுல் (24) என்பதும், இவர்கள் 3 பேரும் கோவை டி.கே. மார்க்கெட்டில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளைய டிக்க பயன்படுத்திய கடப் பாரை, கம்பி, கையுறை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கும்பலுக்கு ரபீக் தலைவனாக இருந்ததும் தெரிய வந்தது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வௌியாகின. அது குறித்து போலீசார் கூறியதாவது:-

சிறையில் நட்பு

கோவை டி.கே.மார்கெட்டில் கூலித்தொழிலாளியாக ரபீக் வேலை பார்த்து வந்து உள்ளார். பின்னர் அவர், போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட போது கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதான முத்துக்குமார், கோகுல் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர்.

சிறையில் இருந்து வெளியே வந்த முத்துக்குமார், கோகுல் ஆகியோர் ஈரோட்டில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடினர். பின்னர் அவர்கள் கேரள மாநிலம் அட்டப்பாடி சென்று கும்பல் தலைவனான ரபீக் வீட்டில் தங்கினர்.

இதையடுத்து அவர்கள் 3 திட்டமிட்டு கோவை வந்து கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் 3 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story