சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாலக்கரை பீமநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி 8 வயது வயதுடைய சிறுமிக்கு கலர் பென்சில் வாங்கி தருவதாக தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சிறுமியின் தாய் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை முடிந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.