நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில்  தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல்- மோகனூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினசரி ஊதியமாக ரூ.620 வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ததற்கான கார்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் 13 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 7 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் வேலை செய்வதாக தெரிகிறது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தினந்தோறும் ரூ.700 ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆஸ்பத்திரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story