மேட்டூர் அருகே பாலிக்காட்டில்ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலைமறியல்அதிகாரிகள் சமரசம்


மேட்டூர் அருகே பாலிக்காட்டில்ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலைமறியல்அதிகாரிகள் சமரசம்
x
சேலம்

மேட்டூர்

மேட்டூர் அருகே பாலிக்காட்டில் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

சாலைமறியல்

சேலம் மாவட்டம்கொளத்தூர் ஒன்றியம் மூலக்காடு ஊராட்சி மேட்டூர்- கொளத்தூர் இடையே பாலிக்காடு என்ற இடத்தில் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன், மேட்டூர் துணை போலீஸ்சூப்பிரண்டு மரியமுத்து, மூலக்காடு ஊராட்சி தலைவர் மணிமொழி ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தொழிலாளர்கள் கூறுகையில், எங்களில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அடையாள அட்டையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த சீல் வைக்கப்பட்டவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். எனவே எங்கள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில், அந்த சீலுக்கும், உதவித்தொகைக்கும் தொடர்பு கிடையாது. எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினர். அதன்பிறகு தொழிலாளர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த திடீர் மறியல் போராட்டத்தால் மேட்டூர்- கொளத்தூர் இடையே சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story