சேந்தமங்கலத்தில் தொழிலாளர் தினம் கொண்டாட்டம்
நாமக்கல்
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்ட தனியார் மின் பணியாளர் சங்க சேந்தமங்கலம் கிளை சார்பில் சேந்தமங்கலத்தில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. சேந்தமங்கலம் தலைவர் முருகவேல் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணி, செயற்குழு தலைவர் செல்வராஜ், கவுரவ தலைவர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சேந்தமங்கலம் பேரூராட்சி தலைவர் தனபாலன் கலந்து கொண்டு, சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ராஜூ, செயல் தலைவர் நரசிம்மன், மாவட்ட பொருளாளர் போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story