தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்
x

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

திருச்சி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு 'நிதி ஆப்கே நிகத்' (வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்) என்ற பெயரில் திருச்சி மண்டல அளவிலான குறை கேட்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி திருச்சி மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் பின்வரும் இடங்களில் இந்த குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-

திருச்சி - கலைவாணி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, சிங்கர் கோவில் தெரு, ஸ்ரீரங்கம். புதுக்கோட்டை- இசட்எப்ரானே ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆலை-1, மதுரை-திருச்சி நெடுஞ்சாலை, புதுப்பட்டி சாலை, விராலிமலை. அரியலூர்- மான்ட்போர்ட் மெட்ரிக்பள்ளி, ராஜாஜிநகர், அரியலூர்.

பெரம்பலூர்- தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை பிரைவேட் லிமிடெட், உடும்பியம், வேப்பந்தட்டை. கரூர்- டான்செம் மெட்ரிக் பள்ளி, மாயனூர். தஞ்சை- தஞ்சாவூர் கூட்டுறவு அச்சக வளாகம், தஞ்சாவூர். திருவாரூர்- சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி சாலை, முத்துப்பேட்டை. நாகை- ஈ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி, நாகூர் மெயின்ரோடு, நாகை. மயிலாடுதுறை- ஓட்டல் பாம்ஸ், டவுன் விரிவாக்க சாலை, மயிலாடுதுறை. விழுப்புரம்- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி, மயிலம், திண்டிவனம். கடலூர்- நகராட்சி அலுவலக கூட்டரங்கம், சிதம்பரம். கள்ளக்குறிச்சி- மவுண்ட்பாா்க் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952-ன் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அந்தந்த மாவட்டங்களில் மேற்கண்ட இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் எஸ்.முருகவேல் தெரிவித்துள்ளார்.


Next Story