சுயஉதவிக்குழுவில் பணிபுரியும் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
சுயஉதவிக்குழுவில் பணிபுரியும் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
மதுரை
மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரபு (வயது 23). சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழராங்கியம் பகுதியை சேர்ந்தவர் தந்தீஸ்பிரபு (23). இவர்கள் இருவரும் மகளிர் சுய உதவி குழு கடன் கொடுக்கும் பிரிவில் அதனை வசூல் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று ஜெயபிரபுவை வசந்தநகர் பகுதியில் வசூலுக்கு வரும்படி தந்தீஸ்பிரபு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதில் ஆத்திரமடைந்த தந்தீஸ் பிரபு, ஜெயபிரபுவை அவதூறாக பேசி தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தீஸ்பிரபுவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story