தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம்


தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம்
x

தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்க நிறுவனம் (எம்.எஸ்.எம்.இ.) மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கம், மாவட்ட தொழில்மையம் சார்பில் தொழில்முனைவோர்களுக்கான பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு குறித்த பயிலரங்கம் தனலட்சுமி சீனிவாசன் ஓட்டல் கூட்ட அரங்கில் நடந்தது. பயிலரங்கில் எம்.எஸ்.எம்.இ. சென்னை உதவி இயக்குனர் சி.பி.ரெட்டி அறிமுக உரையாற்றினார். இந்த பயிலரங்கை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தொடங்கி வைத்து பேசுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள புதிய உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு சான்றிதழ்களை பெறுவதின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கூடுதல் மானியங்களை பெறலாம். தொழில் நிறுவனங்கள் இச்சான்றிதழ்பெற www.zed.msme.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறினார். இந்த கூட்டத்தில் எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குனர் சுரேஷ் பாபுஜி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி இயக்குனர் கிரண்தேவ் சட்லூரி நன்றி கூறினார்.

1 More update

Next Story