தூத்துக்குடியில் தபால் ஊழியர்களுக்கான பயிலரங்கம்
தூத்துக்குடியில் தபால் ஊழியர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
தூத்துக்குடி
இந்திய தபால் துறை சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தபால் துறை ஊழியர்களுக்கான பயிலரங்கம் தூத்துக்குடியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா தலைமை தாங்கினார். உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள என்.எம்.குமரன், வசந்த சிந்து தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story