மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம்
சங்கராபுரத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்:
சங்கராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முதற்கட்டமாக விண்ணப்பித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் ஆர்.ராஜலட்சுமி, கண்காணிப்பு அலுவலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை விசாரித்து தகுதியான பயனாளியை தேர்வு செய்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், பதிவு அலுவலர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story