பணிமனை மறுசீரமைப்பு பணி: செங்கோட்டை, குருவாயூர் ரெயில்கள் இன்று மானாமதுரை வழியாக இயக்கம்


பணிமனை மறுசீரமைப்பு பணி: செங்கோட்டை, குருவாயூர் ரெயில்கள் இன்று மானாமதுரை வழியாக இயக்கம்
x

கோப்புப்படம்

பணிமனை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை, குருவாயூர் ரெயில்கள் இன்று மானாமதுரை வழியாக இயக்கப்படுகின்றன.

மதுரை,

திருச்சி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் மறுவடிவமைப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மதுரை வழியாக இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16352) இன்று (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதற்காக திருத்தணி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16128) இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16847) இன்று திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16848) இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும்.

ராமேசுவரம்-புவனேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20895) இன்று காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும். மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22672) இன்று மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு சென்னை புறப்படும்.


Next Story