ஒர்க் ஷாப் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கிணத்துக்கடவு அருகே குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ஒர்க் ஷாப் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ஒர்க் ஷாப் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடிபோதையில் தகராறு
கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது (49)) இவர் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி(44) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையில் நாராயணசாமி மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாராயணசாமி பொருட்களை அடித்து உடைத்ததோடு மனைவியிடம் தகராறில ஈடுபட்டார். இதனால் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது துப்பட்டாவால் நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.