உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி


உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கோவை ரேஸ்கோர்சில் விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. இதை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்ன தாக அவர், எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, இணை இயக்கு னர் சந்திரா, துணை இயக்குனர் அருணா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்ட அலுவலர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் பல்வேறு நர்சிங் கல்லூரியைச் சார்ந்த 600 மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

கோவை மாவட்ட சுகாதார பணிகள் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ரேஸ்கோர்ஸ் சாலை முழுவதும் சென்று மீண்டும் அதே இடத்தை வந்தடைந்தது


Next Story