உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு: எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அமர்ந்து சினிமா பார்த்த கலெக்டர்


உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு: எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அமர்ந்து சினிமா பார்த்த கலெக்டர்
x

எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொதுமக்களிடையே சமத்துவத்தை நிலை நிறுத்தும் வகையிலும், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருவள்ளூரில் உள்ள திரையரங்கில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தார். அவருடன் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட திட்ட மேலாளர் கவுரிசங்கர், மாவட்ட ஐ.சி.டி.சி. மேற்பார்வையாளர் பபிதா, களப்பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story