உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
திமிரி பேரூராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
திமிரி பேரூராட்சியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திமிரி வட்டார சுகாதார அலுவலர்கள் நடத்திய இந்த ஊர்வலத்தில் ஆற்காடு மகாலட்சுமி நர்சரி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, திமிரி தேரடியில் இருந்து பஜார் வீதி வழியாக கையில் எய்ட்ஸ் கட்டுப்பாடு பற்றி விளம்பர பலகை ஏந்தி, திமிரி சுகாதார நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தை திமிரி வட்டார சுகாதார அலுவலர் இளையராஜா தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி முதல்வர் சிவசக்தி, துணை முதல்வர் ஞான தீபா, சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி மற்றும் திமிரி இன்ஸ்பெக்டர், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் எய்ட்ஸ் கட்டுப்பாடு பற்றி விளக்க உரையாற்றி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story