பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்தில் உலக ஆட்டிசம் தின விழா
பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்தில் உலக ஆட்டிசம் தின விழா நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் உலக ஆட்டிசம் தினவிழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆசிரியர் பயிற்றுனர் ஸ்வப்னா தலைமை தாங்கி, ஆட்டிசம் குறித்தும், அந்த மாணவ-மாணவிகளை கண்டறியும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினார். ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
விழாவில் 19 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி வடக்கு வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றல் அடைவு திறன் அளவீடு செய்யப்பட்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப தமிழ்,ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு அரும்பு, மொட்டு, மலர் என்ற வகையில் சிறப்பு பாட பயிற்சி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. மேலும் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை டாக்டர், பெற்றோர்கள் மற்றும் மாண-மாணவிகள் இணைந்து ஆட்டிசம் தின விழா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.