சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக வங்கி அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக வங்கி அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உலக வங்கி அதிகாரிகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள விபத்து மற்று அவசர சிகிச்சை பிரிவு உலக வங்கியிடம் இருந்து கடன் பெற்று செயல்பட்டு வருகிறது. எனவே இந்த சிகிச்சை பிரிவின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது ஆய்வு செய்ய உலக வங்கி அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தது.

அதாவது, உலக வங்கியின் முதுநிலை கண்காணிப்பாளர்கள் தினேஷ் நாயர், ஆருசிபட்நாயக், சிபில் கிறிஸ்டல் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர் பவானி உமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எலும்பு முறிவு சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

சிகிச்சை முறைகள்

தொடர்ந்து உலக வங்கியில் இருந்து ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரி டீன் வள்ளிசத்தியமூர்த்தி, சூப்பிரண்டு தனபால் ஆகியோரிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு அறிந்தனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்பட்டு வருகிறது. உயர்தர தனியார் ஆஸ்பத்திரியை போன்று, சேலம் அரசு ஆஸ்பத்திரி பராமரிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உள்பட அனைத்து வகையான சிகிச்சைகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என்றார்.


Next Story