உலக சைக்கிள் தின பேரணி


உலக சைக்கிள் தின பேரணி
x

உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரம்பலூர்

உலக சைக்கிள் தினத்தையொட்டி பெரம்பலூர் நேரு யுவ கேந்திரா சார்பில் வஞ்சினபுரம் ஊராட்சி நல்லநாயகபுரம் கிராமத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில், நல்லநாயகபுரம் கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணியை வஞ்சினபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளந்தென்றல் வேல்முருகன் தொடங்கி வைத்தார். சைக்கிள் ஓட்டுவதின் நன்மை குறித்து இளைஞர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நல்லநாயகபுரம் அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்.


Next Story