உலக புத்தக தின விழா
தாயில்பட்டியில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டி பொது நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நூலக பொறுப்பாளர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 20 மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் ஆசிரியை ஜெயமேரி புத்தக உண்டியல் அறிமுகப்படுத்தினார். அதில் நூலகங்களில் புத்தகங்களில் உள்ள கருத்துக்களை கூறும் மாணவ, மாணவிகளுக்கு உண்டியலில் ஒரு புத்தகத்திற்கு ரூ.5 வீதம் போடப்படும். இதன் மூலம் மாணவ, மாணவிகளின் வாசிப்புத்திறனை ஊக்கப்படுத்தலாம் என ஆசிரியை ஜெயமேரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story