உலக தாய்ப்பால் தினவிழா


உலக தாய்ப்பால் தினவிழா
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:46 PM GMT)

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தினவிழா ஒருவாரம் நடக்கிறது.

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தினவிழா ஒருவாரம் நடக்கிறது.

உலக தாய்ப்பால் வார விழா

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா 1-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவமனை முதல்வர் டாக்டர் சத்தியபாமா தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி அவர் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- உலக அளவில், இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதாசாரம் மிகவும் குறைவாக உள்ளது. இதை மாற்ற நாம் மிகவும் கடினமாக உழைத்து, இந்த விகிதாசாரத்தை நூற்றுக்கு நூறு சதவீதமாக மாற்ற வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தாய்ப்பால் கொடுக்காததால் தாய்க்கும் மற்றும் சேய்க்கும் பல்வேறு உடல் நல குறைவுகள் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் குழந்தைகள் நல துறைத்தலைவர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், மகப்பேறு துறை தலைவர் இந்திராணி, நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபி, தென்றல் மற்றும் குழந்தை மருத்துவர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story