உலக தாய்ப்பால் வாரவிழா
முனைஞ்சிப்பட்டியில் உலக தாய்ப்பால் வாரவிழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி நூலக கட்டிடத்தில் நாங்குநேரி வட்டார தேசிய தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. விழாவுக்கு முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கித்துரை தலைமை தாங்கினார். வட்டார மேற்பார்வையாளர் எஸ்தர் வரவேற்றார். வார்டு கவுன்சிலர் பேச்சியம்மாள், குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் பர்வதராணி ஆகியோர் தாய்ப்பாலின் நன்மைகள், 1000 தங்கநாட்கள், "பணிபுரியும் பெண்களின் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குவோம்" என்பது குறித்து விளக்கி பேசினார்கள். கோலப்போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. தாய்மார்கள், பணியாளர்கள் ஊர்வலமாக சென்றனர். முடிவில் பணியாளர் அந்தோணியம்மாள் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story