உலக எரிகற்கள் தின கருத்தரங்கு


உலக எரிகற்கள் தின கருத்தரங்கு
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 6:45 PM GMT)

கேர்கம்பை அரசு பள்ளியில் உலக எரிகற்கள் தின கருத்தரங்கு நடந்தது.

நீலகிரி


கோத்தகிரி


கோத்தகிரி அருகே கேர்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக எரிகற்கள் தினத்தையொட்டி சிறப்பு அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.ராஜு கலந்துகொண்டு பேசும்போது, 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி ரஷ்யாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது 200 அடி அகலமுள்ள விண்கல் மணிக்கு ஒரு லட்சம் கி.மீ. வேகத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் 2,100 சதுர கி.மீ. பரப்பில் இருந்த 8 கோடி மரங்கள் நொடிப்பொழுதில் கருகின. இதுபோன்ற இயற்கை நிகழ்வுகள் குறித்து அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சிறியதுகள் முதல் 500 மீட்டர் நீளமுடைய அஸ்ட்ராய்டுகள் எனப்படும் சில விண்கற்கள் பூமியினுள் விழும் போது வாயுமண்டலத்தின் உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிநட்சத்திரமாக பூமியின் மீது விழுகிறது. இதுபோன்ற எரிகற்கள் விழுந்த இடத்தில் தான் இருடியம் என்ற உலோகம் காணப்படும். இதுபோன்ற வானியல் ஆய்வுகள் நடைபெற்றதால் தான் மனித குலத்திற்கு வானொலி, டிவி, இன்டெர்நெட், கணினி போன்ற பல தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்து கொடுக்கப்பட்டது என்றார். முன்னதாக ஆசிரியை லலிதா வரவேற்றார்.


முடிவில் ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினார்.



Next Story