உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா


உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் காமராஜர் சிலை அருகே செயல்பட்டு வரும் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு பி.எஸ்.என்.எல் அதிகாரி சாமுவேல் சுந்தர்சிங் தலைமை தாங்கி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக மாணவர்கள் வரவேற்பு நடனம் ஆடினார்கள். பள்ளி தாளாளர் தவமணி, தலைமையாசிரியர் சங்கரசுப்பிரமணியன், சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர் மகேஸ்வரி, இயன்முறை மருத்துவர் புனிதா, அலுவலக பணியாளர் கவிதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story