உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
வள்ளியூரில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் பெட் கல்வியியல் கல்லூரி சார்பில், உலக சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, வள்ளியூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது. பெட் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் ஜமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பெபிலா ஜோஸ்பின் பேசினார்.
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். ஆசிரிய பயிற்சி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
Related Tags :
Next Story