உலக சுற்றுச்சூழல் தினம்
தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
ஸ்பிக்நகர்:
உலக சுற்றுச்சூழல் தினம் 2023 பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு என்ற கருப்பொருளுடன் ஸ்பிக் கிரீன் ஸ்டார் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ஹேமந்த் ஜோசன் தலைமையில் சுற்றுசூழல் தின உறுதிமொழியை நிறுவன அதிகாரிகளும், தொழிலாளர்களும் எடுத்துக்கொண்டார்கள். ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் எஸ்.ஆர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் நவீனமயமாக்கலில் எவ்வாறு சுற்றுச்சூழல் நோக்கங்களை இணைத்து செயல்படுத்தப்பட்டது என்பதை எடுத்துரைத்தார். உலக சுற்றுச்சூழல் தின வினா-விடை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் செய்யப்பட்ட நடவு விதை பேனாக்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் போது 165 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் ஆலையின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பொது மேலாளர் செந்தில்நாயகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் என்ஜினீயர்கள், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.