உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்..! நாடு முழுவதிலிருந்தும் குவிந்த லட்ச கணக்கான பக்தர்கள்


உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி கோலாகலம்..!  நாடு முழுவதிலிருந்தும் குவிந்த லட்ச கணக்கான பக்தர்கள்
x

வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆரோக்கியமாதாவின் அருளை பெறவும், வங்கக்கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்கவும் உலகெங்கிலும் இருந்து மக்கள் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கம். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ந் தேதி மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வேளாங்கண்ணி பேராலய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்றிரவு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதிலிருந்தும் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர் .

1 More update

Next Story