உலக உணவு பாதுகாப்பு தினம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


உலக உணவு பாதுகாப்பு தினம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை,

நாளை உலக பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், 'மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு தினத்தில் வலியுறுத்துகிறேன்.' என பதிவிட்டுள்ளார்.


Next Story