நாகையில், உலக வன நாள் விழா


நாகையில், உலக வன நாள் விழா
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:45 PM GMT)

நாகையில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம்

நாகையில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.

உலக வன நாள்

நாகை மாவட்ட மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உலக வன நாளை முன்னிட்டு நேற்று வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசும் போது கூறியதாவது:-

தமிழக வனத்துறை சார்பில் வனங்களை பாதுகாக்ககும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21- ந்தேதி உலக வன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

விழிப்புணர்வு ஊர்வலம்

இவ்விழாவில் நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப் படை மாணவ - மாணவிகள் வன பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்து உரைக்கும் பொருட்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

தொடர்ந்து சாமந்தான்பேட்டை கடற்கரையில் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்ட அரிய வகை ஆலிவர் ரெட்லி கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. இயற்கையை பேணி காக்க ஒவ்வொரு மனிதனும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார். இதில் அரசு அதிகாரிகள், தேசிய பசுமை படை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story