உலக சுகாதார தின விழிப்புணர்வு
உலக சுகாதார தின விழிப்புணர்வு
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை அடுத்த வளந்தாய் மரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவ அலுவலர், ஆரியா, ஆயூர்வேத மருத்துவர் சிவதாஸ், மருத்துவம் சாரா, மேற்பார்வையாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிைல வகித்தனர். இதில் அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடற்பயிற்சி, யோகா, தொழிற்சாலைகளை தினசரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சிவசங்கர், சரத்குமார், கோகுல் மருந்தாளுநர் திருமலைவெங்கடேஷ், ஆய்வக உதவியாளர் சுரேஷ் செவிலியர் முத்துமீனா, அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story