அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில்உலக இதய தின விழிப்புணர்வு பேரணி


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில்உலக இதய தின விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக இயத தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

உலக இதய தினம்

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதையொட்டி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தலைமை தாங்கி, உலக இதய தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று இதய தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது இதயத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டது.

பரிசு

முன்னதாக இதய தினம் குறித்து கல்லூரி அரங்கில் மாணவ-மாணவிகள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், கடை நிலை ஊழியர்கள் என 75 பேருக்கு இதய நிபுணர்களால் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், உதவி நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், இருதய துறை தலைவர் முகமது ரபீக் பாபு, டாக்டர்கள் கதிர், ஜானகி, செவிலியர் கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story