உலக இதய தின விழிப்புணர்வு பேரணி


உலக இதய தின விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் இதயவியல் துறை சார்பில் இதய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் நர்சிங் மாணவிகள் பங்கேற்று கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

மேலும் ஆரோக்கியமான இதயத்துக்கு எது தேவை?. எது தேவை இல்லை என்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்க ளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரி யில் இருந்து தொடங்கிய பேரணி அரசு கலைக்கல்லூரி சாலை, கலெக்டர் அலுவலகம், ரெயில்நிலையம் வழியாக அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது.

இதில் டாக்டர்கள் நம்பிராஜன், சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இதயவியல் துறை மாணவிகள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இதய வடிவில் கோலம் போட்டு இருந்தனர்.


Next Story