உலக புகையிலை ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி


உலக புகையிலை ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி
x

கள்ளக்குறிச்சியில் உலக புகையிலை ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை யொட்டி கள்ளக்குறிச்சி நியூ கே.வி.எம்.ஜூவல்லர்ஸ் நகைக்கடை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் புகையிலை பொருட்களை ஒழிப்போம், புகையிலை பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் உள்ள நகைக்கடையின் முன்பு இருந்து புறப்பட்ட இப்பேரணியானது 4 முனை சந்திப்பு, காந்தி சாலை, மந்தைவெளி, கடைவீதி வழியாக மீண்டும் நகைக்கடையில் முடிவடைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ந் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக உலக சுகாதார நிறுவனத்தால் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என கடையின் உரிமையாளர் வேல்முருகன் தெரிவித்தார்.


Next Story