கடலூரில்உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணிகலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்
கடலூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டு உலக மக்கள் தொகை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தலைமையில் அனைவரும் மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், நிலைய மருத்துவ அலுவலர் கவிதா, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் குமார், மகப்பேறு தலைமை மருத்துவர் லதா, பேறுகால பின்கவனிப்பு திட்ட அலுவலர் சுகந்தி, தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சசிகலா, மாவட்ட குடும்பநல செயலக இளநிலை நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணன், மாவட்ட புள்ளிவிவர உதவியாளர் அரவிந்த்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடும்பநல பொறுப்பு அலுவலர் பாலகுமரன் நன்றி கூறினார்.